கழிவுத் தேயிலையுடன் லொறியில் பயணித்தவர் கைது.

0
156

கழிவுத் தேயிலையுடன் லொறியில் பயணித்தவர் கைது.

பாவனைக்குப் பொருத்தமற்ற 8,807 கிலோகிராம் கழிவுத் தேயிலையுடன் லொறியில் பயணித்த சந்தேகநபர் ஒருவர் நாவலப்பிட்டி பார்க் ரெண்டபொல பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மெனிக்போவ பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவர் என விசாரணையில் தெரியவந்துள்ளதோடு அவர் மேலதிக விசாரணைகளுக்காக எத்கால பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.