நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவளிக்கவேண்டும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டு மக்களினது பாதுகாப்பை உறுதி செய்யவேண்டியது பொதுமக்களின் கடமை என அவர் தெரிவித்துள்ளார்.
20வது திருத்தத்தின் பின்னர் இலங்கை மிகவும் வலுவான நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியை கொண்டிருப்பதால் அவர் வைரஸ் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என முன்னாள் சபாநாயகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீதியான சமூகத்திற்காக தேசிய இயக்கம் 20வது திருத்தத்தை எதிர்த்தாலும் அதன் மூலம்; கிடைத்துள்ள அதிகாரங்களை ஜனாதிபதி வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.