கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூடு – பிரதான துப்பாக்கிதாரி கைது

0
20

கிராண்ட்பாஸ், நாகலகம் பகுதியில் அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட துப்பாக்கிதாரி கிராண்ட்பாஸ் பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிராண்ட்பாஸைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபரே இன்று ( 25) காலை கைது செய்யப்பட்டார்.

துப்பாக்கிச் சூடு தொடர்பாக இதுவரை நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், இதில் இரண்டு பேர் காயமடைந்தனர்.

மார்ச் 17 ஆம் திகதியன்று மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.