கிளிநொச்சியில் உடைந்து விழுந்த பாலத்தின் கட்டுமானப்பணிகள் மீள ஆரம்பம்

0
59

கிளிநொச்சி (Kilinochchi) கரைச்சி பிரதேச சபையினால் நிர்மாணிக்கப்பட்டு ஓராண்டுக்குள் உடைந்து விழுந்த பாலதின் கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது

கிளிநொச்சி பாரதிபுரம் கிருஷ்ணபுரம் மலையாள புரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் பிரதான வீதியான செபஸ்தியார் வீதியில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் கரைச்சி பிரதேச சபையினால் குறித்த பாலம் அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

துரித நடவடிக்கைகள்

இந்தநிலையில் பாலம் உடைந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்தததுடன் மக்கள் போக்குவரத்து செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது. இதனையடுத்து மாவட்ட ஒருங்கிணைப்பு குழு எடுத்த துரித நடவடிக்கைகள் காரணமாக கரைச்சி பாரதிபுரம், செபஸ்தியார் புரம் வீதி பாலத்தின் கட்டுமான பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.