மட்டக்களப்பு மாவட்டத்தில் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக, மாணவர்கள் ஆர்வத்துடன் சென்றதை அவதானிக்க முடிந்தது. இன்று காலை ஆலய வழிபாடுகளில் ஈடுபட்ட மாணவர்கள் பெரியவர்களிடம் ஆசிகள் பெற்று பரீட்சை மண்டபங்களுக்குச் சமூகமளித்தனர். பெற்றோர்கள் ஆர்வத்துடன் மாணவர்களை பரீட்சை மண்டபங்களுக்கு அழைத்துச் சென்றதையும் அவதானிக்க முடிந்தது.
அம்பாறை மாவட்டத்திலும் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் நடைபெற்றது. வானிலை அசௌகரியங்களுக்கு மத்தியிலும், மாணவர்கள் பரீட்சை மண்டபங்களுக்கு, ஆர்வத்துடன், நேர காலத்துடன் வருகை தந்தனர்.
பரீட்சை நிலையங்களுக்கு முன்பாக பொலிஸார்,ஆயுதங்களுடன் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டதையும் அவதானிக்க முடிந்தது.