யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் நேற்று இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து இன்றைய தினம் யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் தொற்று ஏனையோருக்கு பரவுவதை தடுக்கும் முகமாக குருநகர், பாசையூர் பகுதிகளில் வெளிநபர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதோடு 4 இடங்களில் வீதி தடைகள் அமைக்கப்பட்டு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தவிர்ந்த வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் எவரும் உட்செல்லாதவாறு வீதித் தடைகள் போடப்பட்டுள்ளது.
குருநகர், பாசையூர் பகுதிகளில் வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுவதோடு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார்பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.