குளியாப்பிட்டி இளைஞனின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 பேர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

0
73

குளியாப்பிட்டி இளைஞனின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள, 10 சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு, குளியாப்பிட்டி நீதவான் ரந்திக லக்மால் ஜயலத், இன்று உத்தரவிட்டுள்ளார்.

குளியாப்பிட்டி காட்டுப் பகுதியில், இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில், குளியாப்பிட்டி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இளைஞன் யார், எங்கே, எப்படி கொல்லப்பட்டார் என்ற கேள்வி இன்னும் விசாரணையில் இருப்பதாகவும், ஹலவத்தை ஆதார வைத்தியசாலையில், அவரது சடலத்தின் மீதான பிரேத பரிசோதனை நிறைவடையவில்லை எனவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.