கெப்பித்திகொல்லாவ பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!!

0
10

அநுராதபுரம் – கெப்பித்திகொல்லாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்மில்லவெடிய பகுதியில் மின்சாரம் தாக்கி  வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்ட நபரொருவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளதாக கெப்பித்திகொல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (10) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் ஹல்மில்லவெவ பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவராவார்.

இவர் புல்வெட்டும் இயந்திரத்தைப் பராமரித்துக் கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் கெப்பித்திகொல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.