கொரோனா தொற்று சவால் குறித்து சபை ஒத்திவைப்பு தொடர்பான விவாதம் இன்று 23 ஆம் திகதி வெள்ளிக் கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெறும்.
பாராளுமன்றத்தில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை விவாதம் இடம்பெறத் தீர்மானிக்கப் பட்டுள்ளது.
அத்துடன், சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலை மையில் இடம்பெற்ற பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான குழு கூட்டத்தில் அனுர குமார திஸ்நாயக்க இந்த பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.