நேற்று மட்டும் நாட்டில் 510 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர் என்று சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்தது.
இவ்வாறு இனங்காணப்பட்டவர்கள் அனைவரும் மினுவாங்கொடை, பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்று தேசிய கொவிட் 19 கட்டுப்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதேவேளை மினுவாங்கொடை கொத்தணி உருவான பின்னர் 10 ஆயிரத்து 443 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், நாட்டில் ஒட்டுமொத்தமாக 13 ஆயிரத்து 929 பேர் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 8 ஆயிரத்து 285 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இன்னமும் 5 ஆயிரத்து 383 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.