இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் ஐவர் உயிரிழந்தனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் கொரோனா தொற்றhல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
பெண்கள் மூவர் மற்றும் ஆண்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு 2 பகுதியைச் சேர்ந்த 46 வயது நபர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி பிம்புர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
அத்துடன் வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 68 வயது பெண் ஒருவர் நெஞ்சு வலி காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.
கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 58 வயது பெண் ஒருவர் அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
மேலும் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 73 வயது வயோதிபப் பெண் அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில் அவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 74 வயது முதியவர் அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.