24.6 C
Colombo
Wednesday, December 4, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொரோனா தொற்று நீங்க வேண்டி யாழில் ஆலயங்களில் மணி ஒலிக்கச் செய்து வழிபாடு

சகல ஆலயங்களிலும் இன்று 7ஆம் திகதி தொடக்கம் 10 நாள்களுக்கு நண்பகல் 12 மணி தொடக்கம் 10 நிமிடங்கள் மணி ஒலிக்கச் செய்து அனைத்து மக்களும் பிரார்த்தனை செய்ய ஆலய நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நல்லை  ஆதினம் கோரிக்கை விடுத்துள்ளது.


அனைத்து மதத்தவர்களும் இந்தப் பணியை முன்னெடுக்க வேண்டும் என்று  நல்லை ஆதின குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கலாநிதி ஆறு. திருமுருகன், ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் இணைந்து நல்லை ஆதினத்தில நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதுதொடர்பில் நல்லை திருஞானசம்பந்தர் ஆதினம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளவை வருமாறு:
கொரோனா எனும் ஆபத்தான நோயின் அவலம் 3ஆவது அலையாக அதிகரிக்கும் வேளையில் பொதுமக்கள் மிகக் கவனமாக உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
அனைத்து மக்களையும் காத்தருள சிவப் பரம்பொருளை முதற்கண் மன்றாடி, வேண்டுதல் செய்வோம். அனைவரும் பிரார்த்தனைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
ஆலயங்களில் பக்தர்கள் ஒன்று கூடுவதைத் தவிர்த்து வீட்டில் அமைதியாகப் பிரார்த்தியுங்கள்.


ஆலயங்களில் நித்திய நைமித்திய பூஜை வழிபாடுகள் நடைபெறவேண்டும். அதற்கு இடையூறின்றி ஒத்துழையுங்கள்.
சிறுவர்கள், முதியவர்கள், நோயாளர்கள் வீட்டைவிட்டு வெளியில் வருவதை இயன்றவரை தவிருங்கள். வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்.
சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கு அனைவரும் மதிப்புக் கொடுங்கள்.
நோயாளர்களுக்கு உதவும் மருத்துவத் துறையினரின் பாதுகாப்புக்கு அனைவரும் உதவுங்கள். அவர்களுக்காகவும் கடவுளை வேண்டுங்கள் – என்றுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles