கொழும்பு கொள்ளுபிட்டியில் இன்று ஐந்துநட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற திருமணநிகழ்வு குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் பேச்சாளர் அஜித்ரோகண தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் விதிமுறைகளையும்,மேல்மாகாணத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டத்தினையும் புறக்கணித்து ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற திருமண வைபவம் குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.