இரு பொதுசுகாதார பரிசோதகர்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ஜிந்துபிட்டியை சேர்ந்த பொதுசுகாதார பரிசோதகர்கள் குழுவொன்றை சுயதனிமைப்படுத்தலை முன்னெடுக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் பாலசூரிய இதனை தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பை சேர்ந்த இரு பொதுசுகாதார பரிசோதகர்களிற்கு கொரோனா பாதிப்புள்ளமை உறுதியாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இருவரும் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்திய பின்னர் அவர்களிடம் பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் நோயாளிகள் அவர்களது சகாக்கள் தொடர்பிலான தங்கள் பணியின் போது இவர்களுக்கு நோய் தொற்றியிருக்கலாம் என பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஜிந்துபிட்டியவில் உள்ள பொதுசுகாதார பரிசோதகர்கள் குழுவை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.