கொவிட் -19 தொற்றால் இன்று இருவர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் பேச்சாளர் டொக்டர் ஜெயருவான் பண்டார, 77 மற்றும் 78 வயதுகளையுடைய இரு ஆண்களே உயிரிழந்துள்ள தாகத் தெரிவித்தார்.
78 வயதானவர் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாகவும் மற்றவர் வீட்டிலும் இறந்துள்ளனர். இருவரது உடல்களிலும் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டதில் கொவிட்-19 தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது.
இருப்பினும் இரு மரணங்களும் கொவிட்- 19 ஆல் நிகழ்ந்ததா என்பது நிச்சயமற்றது எனவும் அவர் கூறினார். இதன்படி கொவிட்-19 இறப்புகள் 25 ஆக பதிவாகியுள்ளன என்றார்.