கொஸ்கமவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி

0
190

கொஸ்கம வீதியில் அளுத் அம்பலம் பகுதியில் முச்சக்கர வண்டியும் கொள்கலனை ஏற்றிச் சென்ற கனரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (21) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியில் பயணித்த மற்றுமொருவர் விபத்தில் படுகாயமடைந்த நிலையில்இ அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.