பொலன்னறுவை – மஹியங்கனை வீதியில் லத்பந்துர சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
பொலன்னறுவையில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த வேனின் சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதால் வேன் வீதியை விட்டு விலகி எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த குழந்தை, அவரது சகோதரர், தாய் மற்றும் முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்ற நபர் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குழந்தை உயிரிழந்துள்ளது.
விபத்து தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வேனில் பயணித்த ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.