30 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கோலியை முந்தும் ருதுராஜ் கெய்க்வாட்?

இந்திய அவுஸ்திரேலியா இற்கிடையே நடைபெறும் ஐந்தாவது ரி-20 போட்டியில் விராட் கோலியின் ரி-20 சாதனையை ருதுராஜ் கெய்க்வாட் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021இல் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரின் போது விராட் கோலி 231 ஓட்டங்கள் அடித்தார். இந்திய வீரர் ஒருவரின் அதிகபட்ச ஓட்டங்களாக பதியப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் நான்கு போட்டிகளில் மொத்தமாக 213 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

கோலியின் சாதனையை முறியடிக்க 19 ஓட்டங்கள் மட்டுமே தேவை

ரி-20 இருதரப்பு தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி வைத்திருந்தாலும், இரண்டாவது இடத்தில் ருதுராஜ் கெய்க்வாட் இல்லை. கேஎல் ராகுல் 2020ல் நடந்த இருதரப்பு போட்டியின் போது நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து ரி-20 போட்டிகளில் 224 ஒட்டங்கள் அடித்து இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இந்நிலையில், 213 ரன்களுடன் உள்ள ருதுராஜ் கெய்க்வாட் ஐந்தாவது போட்டியில் 19 ஓட்டங்கள் எடுத்தால், இருவரையும் பின்னுக்குத் தள்ளி, அதிக ஓட்டங்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles