சஜித் பிரேமதாச நிச்சயம் அடுத்த ஜனாதிபதியாவர் என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.எதிர்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் நிச்சயம் தேர்தலில் வெற்றி கொள்ள முடியும். அதேபோன்று நாட்டின் வெற்றி தொடர்பில் சிந்திப்பவர்கள் நிச்சயம் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி செல்ல மாட்டார்கள்.
நிச்சயமாக அடுத்த ஜனாதிபதியாக சஜித் பிரேமதாச நியமிக்கப்படுவார். ஐக்கிய மக்கள் சக்தி மக்களுடனேயே கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ளது.
நாட்டுக்கு பொருத்தமான கொள்கையை உடையவர்கள் யார் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மாறாக யார் யாருடன் இணைந்து கொள்ளப்போகின்றார்கள் என்பதுஅல்ல. மக்கள் விரும்பும் பக்கத்தில் இல்லாவீட்டால் மக்கள் எம்மை நிராகரிப்பர்.