சதித்திட்டங்களால் வடக்கு மாகாணத்தில் பறிகொடுக்கப்பட்ட ஆசனங்களை, எதிர்காலத்தில் மீட்டெடுக்கும் வகையில் தமது செயற்பாடுகள் அமையும் என இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு, மக்கள் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்ட கவீந்திரன் கோடீஸ்வரன்
தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.