
சதொச நிறுவனத்திற்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (18)10 மில்லியன் முட்டைகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
தற்போது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரம் உறுதி செய்யப்பட்டுள்ள 10 மில்லியன் முட்டைகளை இவ்வாறு வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக அதன் தலைவர் ஆசிரி வலிசுந்தர குறிப்பிட்டார்.
பண்டிகை காலத்துக்கு தேவையான 15 மில்லியன் முட்டைகள் நாளை (17) நாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட பின்னர் குறித்த முட்டைகள் சந்தைக்கு வெளியிடப்படும் ஆசிரி வலிசுந்தர மேலும் குறிப்பிட்டார்.