சம்பள முரண்பாட்டை எதிர்வரும் 14 நாட்களுக்குள் தீர்க்காவிடின், 26ம் திகதி கொழும்பில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சு.பிரதீபன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.