சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்

0
33

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக ஜகத் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். 

நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அத்துல திலகரத்ன என்பவர், 2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சட்டவிரோதமாக விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் எழுந்து வரும் சர்ச்சைகளை கருத்தில் கொண்டு சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய காமினி பி. திசாநாயக்க, சிறைச்சாலைகள் பதில் ஆணையாளரிடம் தனது இராஜினாமா கடிதத்தை இன்று வியாழக்கிழமை (12) சமர்ப்பித்திருந்தார். 

இதனையடுத்து, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக ஜகத் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.