மொனராகல சிறைச்சாலையில் சிறைச்சாலை அதிகாரிகளிற்கும் கைதியொருவருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக கைதியொருவர் உயிரிழந்துள்ளார்.
கைதியொருவர் சிறைச்சாலை அதிகாரியொருவரை கல்லால் தாக்கிய சம்பவத்தினை தொடர்ந்து இரு சிறைச்சாலை அதிகாரிகள் கைதியை தாக்கியதன் காரணமாக காயமடைந்த கைதி பின்னர் உயிரிழந்துள்ளார் என சிலோன் டுடே செய்திவெளியிட்டுள்ளது.
உயிரிழந்த கைதி அடைத்து வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு சிறைச்சாலை அதிகாரி சென்றவேளை தன்னை திறந்துவிடுவதை தாமதப்படுத்தியதற்காக சிறைக்கைதி சிறைச்சாலை அதிகாரியை ஏசியுள்ளார்.
இதன் காரணமாக இருவருக்கும் இடையி;ல் வாக்குவாதம் வலுத்தவேளை இரு சிறைக்கைதிகள் சேர்ந்து சிறைச்சாலை அதிகாரியை தாக்கியுள்ளனர்.
இதன் காரணமாக காயமடைந்த கைதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
கைதியால் தாக்கப்பட்ட சிறைச்சாலை அதிகாரியி;ன் கைஉடைந்துள்ளது அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இந்த சம்பவம் குறித்து விசாரணைகளிற்கு உத்தரவிட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அம்பாறையை சேர்ந்த 42 வயது உபுல் நிசாந்த என்ற கைதியே உயிரிழந்துள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.