சுகாதார அமைச்சின் ஊழியர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இதனை உறுதிப்படுத்தினார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
குறித்த நபரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களுக்கு அமைவாக அவருடன் நெருங்கி பழகியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.