கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் அடுத்தவாரம் முதல் கடுமையான முறையில் செயல்படுத்தப்படும். எனவே, பொதுமக்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் அன்றாடச் செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என காணி விவகார அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த மேல் மாகாணம் உட்பட பெரும்பாலான பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மாத்திரமே தற்போதைய நெருக்கடியான
சூழ்நிலையை வெற்றிகொள்ள முடியும்.
மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் இவ்வாரம் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும். சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் வாரம் முதல்; கடுமையாகச் செயல்படுத்தப்படும்.
பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மாத்திரமே இந்நெருக்கடி நிலையை வெற்றி கொள்ள முடியும். ஆகவே பொதுமக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.