வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தினால் ஆலோசனைக் கோவை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பின் வருமாறு
*ஒருவர் கொரோனா நோயாளியுடன் பழகியிருக்கலாமென்ற சந்தேகம் எழுந்த நாள் முதல் 14 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும்.
*எனினும், வீட்டில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டால், சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கமைவாக தனிமைப்படுத்தல் காலம் நீடிக்கப்படலாம்.
*எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது.
*அதேபோன்று, வெளிநபர்கள் எவரையும் வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது.
*இயலுமானவரை, வீடுகளுக்குள் காற்றோட்டத்தைப் பேண வேண்டும்.
*அனைத்து சந்தர்ப்பங்களிலும் வீடுகளுக்குள் ஒவ்வொருவருக்கிடையிலும் 01 மீட்டர் இடைவெளியைப் பேண வேண்டும்.
வீட்டிற்குள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது முகக்கவசம் அணிந்திருத்தல் கட்டாயமானது.
*அழுக்கான கைகளினால் முகம், வாய், மூக்கு பகுதிகளை தொடக்கூடாது.
குடும்ப உறுப்பினர்களும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் 20 விநாடிகள் கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும்.
*கை கழுவுவதற்கான வசதி இல்லாதவிடத்து, கிருமித்தொற்று நீக்கும் திரவத்தை பயன்படுத்தலாம்.
*இயலுமானால், வீட்டிலுள்ள அனைவரும் நாளொன்றில் இரு தடவையேனும், உடல் வெப்பநிலையை பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
*வயோதிபர்கள் மற்றும் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டவர்களிடம் விலகியிருத்தல் அவசியமாகும்.
*நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டவர்களை பராமரிக்க வேண்டிய தேவை காணப்படின், அவர்களுக்கான மருந்துகளை உரிய நேரத்திற்கு வழங்க வேண்டும்.
*இருமல் , தும்மல் வரும் போது டிஷ_த் தாள்களை பயன்படுத்தல் அல்லது முகத்தை முழங்கைகளின் உட்புறத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
*பயன்படுத்தப்பட்ட டிஷ_ தாள்கள், உரிய வகையில் குப்பைக்கூடைகளுக்குள் அகற்றப்பட வேண்டியது அவசியமாகும்.
ஆரோக்கியமான உணவுகளை உண்ணுதல் அவசியமானது
*நாளொன்றில் இரண்டு தொடக்கம் இரண்டரை லிட்டர் வரை தண்ணீர் பருக வேண்டும்.
*ஒருவர், தாம் கொரோனா நோயாளியுடன் பழகியிருக்கலாமென்ற சந்தேகம் எழுந்தால், அவர் தனது வீட்டில் தனி அறையில் தங்க வேண்டும்.
*அத்தகைய ஒருவர் – இயலுமானால், குளியலறை மற்றும் கழிப்பறை என்பவற்றை பிரத்தியேகமாக பயன்படுத்த வேண்டுமென்பதுடன், அவற்றை சுத்தமாக பேண வேண்டும்.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், இவை உள்ளிட்ட மேலும் சில சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், கொரோனாதொற்றிலிருந்து தம்மையும் சமூகத்தையும் பாதுகாப்பதற்கான இயலுமை ஏற்படுமென சுகாதார மேம்பாட்டு பணியகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைக் கோவையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.