நாடாளுமன்றத் தேர்தல் இந்த வருடம் நடத்துவதற்கான தேவை கிடையாது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இம்பெற்றது. இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத் தேர்தல் அவசரமாக நடத்தப்பட மாட்;டாது. அரசியலமைப்பின் பிரகாரம் பொதத் தேர்தலை இவ்வாண்டு நடத்துவதற்கான தேவை கிடையாது. ஆயினும் ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் மாதத்துக்கு முன்னதாக நடத்தப்பட வேண்டும்.
ஆதலால் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக நடைபெறும். நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்கான நிதியை வரவு-செலவு திட்டத்தின் ஊடாக ஒதுக்கியுள்ளார்.அதனடிப்படையில் அதற்கான ஏற்பாடுகள் உரிய நேரத்தில் முன்னெடுக்கப்படும்.