ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் முப்படைகளின் பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் இன்று இடம் பெற்றது.
உதவி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எ.எம்.சுபியானின் ஏற்பாட்டில் இடம் பெற்ற கலந்துரையாடலில் முப்படைகளின் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் தம்மால் மேற்கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு விடையங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்ததுடன், அனர்த்தங்கள் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்தங்கள் தொடர்பாக மாவட்ட அனர்த்த முகாமைத்து அதிகாரிகளுக்கு இதன் போது தெளிவுபடுத்தப்பட்டது.
நிகழ்வில் உதவி தெரிவத்தாட்சி அலுவலர் நவருபரஞ்சினி முகுந்தன், 243 படைப்பிரியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சத்திம குமாரசிறி, விமானப்படை உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.