டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 விக்கெட்களை விரைவாக பூர்த்திசெய்த இலங்கையர் ப்ரபாத் ஜயசூரிய

0
78
Sri Lanka's Prabath Jayasuriya celebrates after taking the wicket of Ireland's Curtis Campher during the second day of the second and final cricket Test match between Sri Lanka and Ireland at the Galle International Cricket Stadium in Galle on April 25, 2023. (Photo by Ishara S. KODIKARA / AFP)

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இலங்கைக்கும் அயர்லாந்துக்கும் இடையிலான 2 ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரலாற்று சாதனை ஏடுகளில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலிருந்து சாதனைகளும் மைல்கற்களும் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவந்த நிலையில் போட்டியின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை (28) மற்றொரு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்கெட்களைப் பூர்த்தி செய்த இலங்கை வீரர் என்ற சாதனையை ப்ரபாத் ஜயசூரிய இன்று நிகழ்த்தினார்.

முதலாவது  இன்னிங்ஸில் சதம் குவித்த போல் ஸ்டேர்லிங்கின் விக்கெட்டை இரண்டாவது இன்னிங்ஸில் வீழ்த்தியதன் மூலம் இந்த மைல்கல் சாதனையை ப்ரபாத் ஜயசூரிய நிலைநாட்டினார்.

அவர் 7 போட்டிகளில் 50 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் குறைந்த போட்டிகளில் 50 டெஸ்ட் விக்கெட்களைப் பூர்த்திசெய்த இலங்கை விரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார்.

டில்ருவன் பெரேரா, ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் 11 போட்டிகளில் 50 விக்கெட்களைப் பூர்த்திசெய்தன் மூலம் குறைந்த போட்டிகளில் அந்த மைல்கல்லை எட்டிய முன்னைய இலங்கை வீரர்களாக இருந்தனர்.