அநுராதபுரத்தில் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரத்தில் ருவன்வெலி மஹா சேயாவில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே நேற்று புதன்கிழமை (10) இரவு அவருக்கு சேவைக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரைமாய்த்துக் கொண்டுள்ளார் என தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த 55 வயதுடைய பொலிஸ் சார்ஜென்ட் அநுராதபுரத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.