யாழ் மருத்துவ பீட கிளினிக் பயிற்சி மற்றும் ஆராச்சி கட்டட தொகுதியை திறந்துவைக்கும் வைபவத்தில் யாழ் மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் இ.சுரேந்திரகுமார் உரையாற்றும்போது ஜனாதிபதியிடம், யாழ் போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசலைiயாக தரம் உயர்த்துமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, யாழ் போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் என தெரிவித்தமை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், உரிய நேரத்தில் மிக முக்கிய வேண்டுகோளை விடுத்து யாழ் போதனாவை தரமுயர்த்த யாழ் மருத்துவ பீட பீடாதிபதி எடுத்த நடவடிக்கைக்காக தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் யாழ்ப்பாண நீரிழிவு கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
Home வடக்கு செய்திகள் தரமுயர்த்தப்படவுள்ள யாழ் போதனா: நீரிழிவு கழகத்தினர் மகிழ்ச்சி – பீடாதிபதிக்கு பாராட்டு