தாதி வேலையில் விலகிய நிலையில் சம்பளம் வழங்கப்பட்டமை தொடர்பில் விசாரணை

0
141
தாதி ஒருவருக்கு சம்பளமாக கிட்டத்தட்ட 250,000 ரூபா வழங்கப்பட்டமை தொடர்பில் கண்டி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.மூன்று மாதங்கள் ஹடரலியத்த வைத்தியசாலையில் கடமையாற்றிய நிலையில் உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் வெளிநாடு சென்றுள்ளார்.குறித்த தாதி கடந்த மார்ச் மாதம் திடீரென வேலையை விட்டுவிட்டு சிங்கப்பூருக்கு வேறு வேலைக்காக சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.தெல்தெனிய வைத்தியசாலையில் இருந்து ஹடரலியத்த வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட தாதி சேவையை விட்டு வெளியேறுவதாக நிர்வாகத்திற்கு அறிவிக்கப்படவில்லை என கண்டி மாவட்ட வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.தாதியின் மாதச் சம்பளம் சுமார் மூன்று மாதங்களாக அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதுடன், தணிக்கையின் போதே இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது.