31 C
Colombo
Tuesday, December 3, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

திருமலை பொது வைத்தியசாலை வைத்தியரொருவருக்கு கொரோனா!

திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியரொருவருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.

விடுமுறைக்காக சென்று கடந்த 27 ஆம் திகதி வைத்தியசாலைக்கு வருகை தந்ததாகவும் அதனையடுத்து அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் 30 வயதுடைய வைத்தியர் எனவும் தெரியவருகின்றது.

குறித்த வைத்தியர் 5ம் 06 வாட்டில் கடமையாற்றியவர் எனவும் தெரியவருகின்றது.

கொரோனா தொற்றுக்குள்ளான வைத்தியரை IDH வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜகத் விக்ரமரத்ன குறிப்பிட்டார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles