துருக்கியின் இஜ்மிர் பிராந்தியத்தை தாக்கிய பூகம்பம் காரணமாக நால்வர் பலியாகியுள்ளனர்.
துருக்கியின் சுகாதார அமைச்சர் தனது டுவிட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்.
நால்வர் பலியாகியுள்ளனர் 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துளளார்.துருக்கியின் ஏஜியன் கடற்கரை பகுதியை தாக்கிய பூகம்பம் காரணமாகவே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
துருக்கியின் இஜ்மிரில் மையம்கொண்டிருந்த இந்த பூகம்பம் 7.0 ஆக பதிவாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பைரக்கிலி என்ற நகரமே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது
எனினும் துருக்கி அதிகாரிகள் 6.5 என பதிவான பூகம்பமே தாக்கியுள்ளது 20 வீடுகள் தரைமட்டாகியுள்ளன என தெரிவித்துள்ளனர்.
சமோஸ் பகுதியில் சிறிய சுனாமி உருவானது எனவும் துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.