24 C
Colombo
Wednesday, December 4, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தெங்கு செய்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட விசேட தொலைபேசி இலக்கம்

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வினை பெற்றுக்கொள்ள தென்னை பயிர்ச்செய்கை சபை விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி,1916 எனும் இலக்கத்திற்கு அறிவிக்குமாறு தென்னை பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது.

தொலைபேசி இலக்கம்

அத்துடன், இந்த இலக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை(05) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளை ஈ நோய் உள்ளிட்ட தென்னைச் செய்கை தொடர்பான எந்தவொரு பிரச்சினையையும் விவசாயிகளுக்கு நேரடியாகத் தெரிவிக்கக்கூடிய வகையில் தொலைபேசி இலக்கத்தை வழங்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, தென்னை பயிர்ச்செய்கை சபைக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைய, குறித்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தெரிவிக்கப்படும் எந்தவொரு பிரச்சினைக்கும் உடனடியாகப் பதிலளித்து, அந்த பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்குவதற்கு அதிகாரிகள் தயாராக உள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles