26.9 C
Colombo
Thursday, December 7, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

தேசிய பிரச்சினையை தீர்க்கும் வகையில், சமஸ்டி தீர்வை, அரசு வழங்க வேண்டும் : சிவஞானம் சிறிதரன்

தமிழர்களது தேசிய பிரச்சினையை தீர்க்கும் வகையில், சமஸ்டி தீர்வை, அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு நிகழாவிடின், கோட்டாபய ராஜபக்ஷ சந்தித்த விளைவை, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் சந்திக்க நேரிடும் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.இன்று, கிளிநொச்சி முரசு மோட்டையில், சமகால அரசியல் நிலைப்பாடு தொடர்பான சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார். சமுக செயற்பாட்டாளர் தம்பிராசா யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பில், முரசுமோட்டை வட்டார வேட்பாளர் அலோசியஸ்குணாளன் பமிகரன், புலிங்கதேவன் முறிப்பு கமக்கார அமைப்பு தலைவர் பரமலிங்கம் பாஸ்கரன், கட்சி செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், பொது மக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து உரையாற்றுகையில் தமிழதமிழர்களுக்கான உரிமைகளை தருவதற்கு சிங்களதேசம் எப்போதும் தயாராக இல்லை தற்போதள்ள ரணில் அரசு கடந்த காலங்களில் தமிழர்கள் மீதான இன அழிப்புக்களையும் தமிழர் மீதான அடக்குமுறைகளையும் மேற்கொண்டுள்ளது. இந்த அரசு தழர்களுக்கான ஒரு தீர்வை வழங்க முன் வர வேண்டும் மாறாக சர்வதேசத்தையும் ஏமாற்றி தமிழர்களை ஏமாற்றி தங்களுடைய ஆட்சிக்காலத்தை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு ரணில் அரசு இருந்தால் அது பாரிய விளைவை ஏற்படுத்தும் தமிழ் இனத்தினுடைய தனித்துவமான அரசியல் பிரச்சனை இந்த இன அரசியலை நாங்கள் வென் றெடுப்பதற்கு சிங்கள பௌத்த பேரினவாத அரசியலிடமிருந்து எங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது அதிலும் இந்த தேர்தல் நடக்கக்கூடாது இது தன்னுடைய பதவிக்காகவும் இத்தேர்தலை எவ்வாறு பின்கொண்டு செல்வது அத எவ்வாறு செய்யலாம் என்ற எண்ணம் இந்த அரசுக்கு உள்ளது. இந்தத் தேர்தலை நாங்கள் எங்கள் இனத்தினுடைய போராட்டத்தின் களமாக பார்க்கின்றோம் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காணி அதிகாரம் போலீஸ் அதிகாரம் கொடுக்கின்றோம். அது பற்றி இந்த அரசியல் யாப்பில் திருத்தங்கள் பற்றி யோசிக்கின்றோம் . ஜனாதிபதி சம்பந்தன் ஐயாவை அழைத்துப் பேசியதாக செய்திகளில் பார்த்திருக்கின்றோம்.

இதெல்லாம் உலக நாடுகளிடமிருந்து பணத்தை பெறுவதற்கான ஒரு நாடகமாகும் இந்த நாடு பட்டினியை நோக்கி செல்கின்றது இந்த அரசாங்கம் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழர்களுக்கு ஏதோ தீர்வை கொடுப்பது போல சர்வதேசத்திற்கு காட்டி கொண்டிருக்கின்றது. இது மிக ஆபத்தானது ஒற்றை ஆட்சிக்குள் தான் காணி அதிகாரம் போலீஸ் அதிகாரம் வழங்கப்படுவது என்று சொன்னால் அதனை எப்போதும் மீள பறிக்கலாம் மீளப் பெற முடியாத சமஸ்டி முறைக்குள் மாகாணத் துக்கு காணி அதிகாரம் போலீஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் நம்பிக்கைக்குரியதாக இருக்கும்.

தமிழர்கள் தங்களை தாங்களே ஆளுகின்ற ஆட்சி உரிமை அவர்களது மரபுவழி தாயகம் எமது மண்ணில் எமது மொழி அடிப்படையில் எங்கள் தேசிய பிரச்சினையை தீர்க்கும் வகையில் அது சமஸ்டி அடிப்படையிலேயே அமைய வேண்டும் அதை தர தவறி வெறும் ஏமாற்றுக்களை இந்த அரசாங்கம் செய்தால் கோத்தபாய ராஜபக்ச சந்தித்த அதே விளைவை ரணில் விக்ரமசிங்கமும் சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார். நடைபெற உள்ளூராட்சி மன்ற தேர்தலின் உடைய தேர்தல் காலத்தில் தேர்தல் தொடர்பில் தேர்தல் தொடர்பான சமகால அரசியல் நிலைப்பாடு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று என்று முரசு முட்டையில் நடைபெற்றது கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

Related Articles

மட்டக்களப்பு சில்லிக்கொடியாறு பகுதியில், இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியில் உள்ள வாய்க்காலிலிருந்து இளம் குடும்பஸ்தர்ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியை சேர்ந்த 33 வயதுடைய கிருஸ்ணபிள்ளை ரதன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்ட...

காட்டு யானைகளின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தாருங்கள்- மட்டக்களப்பு இலுப்படிச்சேனை மக்கள் ஆர்ப்பாட்டம

மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை பகுதி மக்கள் காட்டு யானைத் தொல்லைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இன்று இலுப்படிச்சேனைப் பகுதியில் குறித்த ஆர்ப்பாட்டமானது இடம்பெற்றது.இலுப்படிச்சேனை-வேப்பவெட்டுவான் பிரதான...

ஜ.சி.சி சிறந்த வீரர்கள் பட்டியலில் முஹமது ஷமி

சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கெளரவித்து வருகிறது. அதன்படி நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மட்டக்களப்பு சில்லிக்கொடியாறு பகுதியில், இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியில் உள்ள வாய்க்காலிலிருந்து இளம் குடும்பஸ்தர்ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியை சேர்ந்த 33 வயதுடைய கிருஸ்ணபிள்ளை ரதன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்ட...

காட்டு யானைகளின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தாருங்கள்- மட்டக்களப்பு இலுப்படிச்சேனை மக்கள் ஆர்ப்பாட்டம

மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை பகுதி மக்கள் காட்டு யானைத் தொல்லைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இன்று இலுப்படிச்சேனைப் பகுதியில் குறித்த ஆர்ப்பாட்டமானது இடம்பெற்றது.இலுப்படிச்சேனை-வேப்பவெட்டுவான் பிரதான...

ஜ.சி.சி சிறந்த வீரர்கள் பட்டியலில் முஹமது ஷமி

சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கெளரவித்து வருகிறது. அதன்படி நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய...

யாழில் தத்திகளின் தாக்கத்தினால் நெற் செய்கை பாதிப்பு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், நெற் செய்கையில், தத்திகளின் தாக்கம் அதிகரித்துள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட விவசாய திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஸ்ரீரங்கன் அஞ்சனாதேவி தெரிவித்துள்ளார்.

தொல்பொருள் சார்ந்த அமைச்சர், இனவாத செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு

தொல்பொருள் சார்ந்த அமைச்சர், இனவாத செயற்பாடுகளையே மேற்கொண்டு வருகின்றார் எனவும், நீதிமன்றத்தை அவமதித்த அமைச்சருக்கு எதிராக, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.