28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நகை அடகு வைத்தே  சட்டத்தரணிக்கு20 ஆயிரம்  ரூபாவை வழங்கினோம்! கைதான இளைஞனின் பெற்றோர்,

சாவகச்சேரியில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் பெற்றோர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தங்களின் குடும்ப நிலையை எடுத்துக்கூறியதுடன், மகனின் விடுதலைக்கு உதவுமாறும் கேட்டனர்.

இந்நிலையில் உரிய தரப்புக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவர்களுக்கு  நிலமைகளை எடுத்துக்கூறினார்.

இதனையடுத்து,  குறித்த இளைஞனின்  பெற்றோருக்கு நம்பிக்கையளித்த அமைச்சர், சஞ்சலமடைந்து தேவையற்ற பண விரயங்களை செய்யாமல் பொறுமையாக இருக்குமாறும் ஆறுதல் தெரிவித்து அனுப்பி வைத்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த கைது செய்யப்பட்ட இளைஞனின்பெற்றோர் இளைஞனை கைது செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்ற போது எந்த சட்டத்தரணியை பிடிப்பது என தெரியவில்லை அப்போது அனைவரும் கூறினார்கள்சயந்தனை கேட்குமாறு

 சட்டத்தரணி சயந்தனை குறித்த வழக்கிற்கு ஆஜராகுமாறு    அழைத்தோம். அவர் குறித்த இளைஞனுக்கு ஆதரவாக வாதாடினார் ஆனால் 20000 தருமாறு கோரினார் 

என்னிடம் அந்த நேரம் பணம் இல்லை  எனது நகைகளை அடகு வைத்து தான்  சட்டத்தரணி சயந்தனுக்கு 20 ஆயிரம்  ரூபாவை வழங்கினேன் எனவும் கைது செய்யப்பட்ட இளைஞனின் பெற்றோர் மனவருத்தத்துடன் அமைச்சரிடம் தெரிவித்தனர்

கடந்த 27 ம் திகதி மாவீரர் நாள் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், கொடிகாம பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விற்கு சென்ற அப்பிரதேசத்தினை சேர்ந்த யூட் சுரேஸ்குமார் டனுஜன்(வயது – 23) என்ற இளைஞன் தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படம் புலிச் சின்னம் ஆகியவை பொறிக்கப்பட்ட  ரீசேர்ட் அணிந்திருந்தார்.

இதனடிப்படையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள குறித்த இளைஞன், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles