நாடளாவிய ரீதியில் வீடுகளுக்கு மருந்துகள் விநியோகிக்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பம்

0
316

கிளினிக்குகளில் பதிவுசெய்யப்பட்ட நோயாளர்களின் வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்கும் திட்டம் நேற்று முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது என தொற்று நோய் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் விஷேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதய சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு கொரோனா தொற்று அச்சத்தால் கிளினிக் நோயாளர்களுக்கான மருந்துகளை அவர்களின் வீடுகளுக்கு விநியோகிக்க சுகாதார அமைச்சால் விடுக்கப்பட்ட சுற்று நிரூபத்திற்கமைய மருந்து விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளினிக்குகளில் பதிவுசெய்யப்பட்ட நோயாளர்களின் வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்கும் இந்த நடவடிக்கை மறு அறிவித்தல் வரை செயல்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் இதற்கான நடவடிக்கைகளை இன்று முதல் மீள ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.