நாடாளுமன்றத் தேர்தல்: வாக்கு எண்ணும் பணி இடம்பெறவுள்ள, மட்டு. இந்துக்கல்லூரியில், அதிகாரிகள் ஆய்வு

0
48

நாடாளுமன்றத் தேர்தலின் போது, மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வாக்கு எண்ணும் நிலையமாக மட்டக்களப்பு இந்து கல்லூரி செயற்படவுள்ளது.
அங்கு இடம்பெறும் முன்னாயத்தப் பணிகள் தொடர்பில், மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் திருமதி ஜஸ்டினா முரளீதரன் மற்றும் மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.ஏ.எம் சுபியான் ஆகியோர் இன்று நேரில் சென்று பார்வையிட்டனர்.

கடமையில் இருந்த அரச உத்தியோகத்தர்களின் பணிகளை அவதானித்ததோடு, நிறைவேற்றப்பட்டுள்ள செயற்பாடுகள் தொடர்பிலும் இவர்கள் ஆராய்ந்தனர்.
நாளைய தினம் வாக்குச் சாவடிகளுக்கான வாக்குப் பெட்டிகள் விநியோகிக்கப்படவுள்ளன.