நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு உத்தரவு விடுத்துள்ள தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு

0
123

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடாத்திய கும்பலுக்கு தலைமை வகித்த சஹ்ரான் ஹஷீமின் மனைவி பாத்திமா ஹாதியா, சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்டவர்கள் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவுக்கு வழங்கிய சாட்சியங்களின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளை வழங்காமை தொடர்பில் எழுத்து மூலம் விளக்கமளிக்குமாறு தகவல் அறியும் உரிமை ஆணைக் குழு நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி நாடாளுமன்ற அதிகாரிகள் விளக்கமளிப்பதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.