நாடு திரும்பிய ஜனாதிபதி

0
124

மாலைதீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.

ஜனாதிபதி இன்று (18) காலை 9.30 மணி அளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு மாலைதீவுக்கு இருந்து இலங்கை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மாலைதீவின் புதிய ஜனாதிபதி மொஹமட் முய்சுவின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 16 ஆம் திகதி பிற்பகல் நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

மாலைதீவின் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு விழா தலைநகர் மாலேயில் நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.