நாடு முற்றாக மூடப்படுவதைத் தடுக்க அதிக ஆபத்துள்ள பகுதிகளில் பயணக் கட்டுப்பாடுகள் கண்டிப்பாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) முக்கிய அங்கத்தவர் டாக்டர் ஹரித அலுத்கே நேற்று (30) தெரிவித்தார்.
சிவப்பு வலயங்களை மூடுவதன் மூலம் குறைந்தது 80% பயண கட்டுப்பாடுகளை அமுல்படுத்த முடியுமானால் நாடு மூடப்படும் அபாயத்தை தவிர்க்க முடியும் என்று அவர் கூறினார்.
தற்போது, குளிர்சாதன பெட்டிகளில் பி.சி.ஆர். 20,000 மாதிரிகள் சிக்கியுள்ளதாகவும் பி.சி.ஆர். சோதனைகளின் முடிவுகள் தாமதமாகிவிட்டால், அந்த முடிவுகளில் எந்த பலனும் இல்லை எனவும் டாக்டர் ஹரித அலுத்கே கூறினார்.
‘கோவிட் -19’ அல்லது கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவாமல் தடுக்கவும், நாட்டை வைரஸிலிருந்து பாதுகாக்கவும் உடனடி சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவுக்கு அறிவிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.