தளபதி விஜய் அரசியல் கட்சி ஒன்றை தொடங்க இருப்பதாகவும் அவரது பெயரில் அரசியல் கட்சி ஒன்று தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தனஆனால் இந்த தகவலை விஜய்யின் தரப்பினர் மறுத்தனர். இதுகுறித்து விஜய்யின் பிஆர்ஓவே தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவல் வதந்தி என்று விளக்கம் அளித்திருந்தார் என்பதை பார்த்தோம்
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இது குறித்து விளக்கமளித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்தது நான்தான் என்றும் விஜய்க்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றும் குறிப்பிட்டு உள்ளார்
விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவே அரசியல் கட்சியாக இதனை பதிவு செய்ததாகவும் எதிர்காலத்தில் இந்த இயக்கத்தில் விஜய் இணைவாரா இல்லையா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றும் எஸ் ஏ சந்திரசேகர் கூறியுள்ளார். இசை சந்திரசேகரின் இந்த விளக்கத்தால் விஜய் ரசிகர்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர்