நீர் கட்டணம் செலுத்தாத அரச நிறுவனங்களின் நீர் இணைப்பும் துண்டிக்கப்படும்!

0
103

கட்டணம் செலுத்தாத அரச நிறுவனங்களுக்கு எதிர்காலத்தில் நீர் விநியோகத் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மேலும், 90 நாட்களுக்குப் பின்னர் அரச நிறுவனங்களுக்கும் தாமதக் கட்டணம் அறிமுகப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மொத்த நீர் நுகர்வோர் எண்ணிக்கை 29 இலட்சம் ஆகும்.

அந்த எண்ணிக்கையில் பெரும்பாலானோர் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மாதாந்திர கட்டணத்தில் 50% செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.