30 C
Colombo
Monday, May 29, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

நெருக்கடிகள் பல ஏற்படுவதற்கு முன்னர் தேர்தலை நடத்துங்கள்

இந்நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை அழிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருவது தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே எனவும், இந்நேரத்தில், நமது நாட்டு மக்களின் அடிப்படை உரிமையான சர்வஜன வாக்குரிமையை சீர்குலைத்து உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு பல சதித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றத்தின் உதவியை நாடியபோது, உயர் நீதிமன்றம் அதை பரிசீலித்து இடைக்கால உத்தரவை பிறப்பித்து தேர்தலுக்கு ஒதுக்கப்படும் பணத்தை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என கூறியிருந்தாலும், அரசாங்கம் தனக்கு விசுவாசமான இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தில் சிறப்புரிமைப் பிரச்சினையை முன்னிலைப்படுத்தி இந்த முடிவை சவாலுக்குட்படுத்தியதாகவும், இதன் காரணமாக ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நீதித்துறை, சட்டவாக்கத்திற்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையில் பாரிய நெருக்கடி நிலை உருவாகியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.

சட்டவாக்கம் நெருக்கடியை ஏற்படுத்தி நாட்டின் ஜனநாயகத்தை அழிக்க ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கடுமையாக முயற்சிப்பதாகவும், இந்த முயற்சிகளை மிகவும் வெறுப்புடன் கண்டிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நீதித்துறை உறுப்பினர்கள் அனைவரினதும் கண்ணியமான இருப்புக்காக எதிர்க்கட்சியாக முன்நிற்பதாகவும் அவர்தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் மற்றும் பாராளுமன்ற அதிகாரங்களைப் பயன்படுத்தி நீதிபதிகளை சங்கடப்படுத்துதல் அவமதிப்புகளுக்குட்படுத்துதல், வரப்பிரசாத குழுக்கு அழைத்து மானவங்கப்படுத்துவதன் மூலம், நீதிமன்றத்துறையில் தலையீடு செய்ய ஆயத்தமாகுவதாகும் எனவும், ஜனநாயகத்தைப் போற்றும் ஒரு மக்கள் பிரதிநிதியாக இதை வன்மையாக கண்டிப்பதாகவும், இந்த சதிகளை முறியடிக்க இன, மத பேதமின்றி அனைவரும் கைகோர்க்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எனவே, அனைத்து அரசியல் சதிகளையும் கைவிட்டு மக்கள் கோரும் தேர்தலை நடத்துமாறும், இல்லையெனில் சில தரப்புகள் ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடலாம் என்பதனால், நாட்டில் இவ்வாறான பாதகமான நிலைமைகள் ஏற்படுவதற்கு முன்னர் தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை பாதுகாக்குமாறு ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்தது!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.இதன்படி இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 289.89 ரூபாவாகவும் விற்பனை விலை...

அநுரவின் அறகலய?

அடுத்த மாதம் 8ஆம் திகதி பிறிதோர் அறகலயவை ஆரம்பிக்கப் போவதாக தேசிய மக்கள் சக்தியின் (ஜே. வி. பி) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருக்கின்றார்.அரசாங்கம் தொடர்ந்தும் உள்ளூராட்சி தேர்தலை பிற்போட்டுவரும்...

இப்படியும் நடக்கிறது…!

ஒருவன் பொருள்களை வாங்குவதற்காக பல கடைகளுக்குச் சென்றான்.பல கடைகளுக்கு சென்றுவந்த பின்னர்தான் கையில் இருந்த குடையை எங்கேயோ வைத்துவிட்டு வந்துவிட்டோம் என்பது நினைவுக்கு வந்தது.ஆனால், எங்கே குடையை வைத்து விட்டோம்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்தது!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.இதன்படி இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 289.89 ரூபாவாகவும் விற்பனை விலை...

அநுரவின் அறகலய?

அடுத்த மாதம் 8ஆம் திகதி பிறிதோர் அறகலயவை ஆரம்பிக்கப் போவதாக தேசிய மக்கள் சக்தியின் (ஜே. வி. பி) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருக்கின்றார்.அரசாங்கம் தொடர்ந்தும் உள்ளூராட்சி தேர்தலை பிற்போட்டுவரும்...

இப்படியும் நடக்கிறது…!

ஒருவன் பொருள்களை வாங்குவதற்காக பல கடைகளுக்குச் சென்றான்.பல கடைகளுக்கு சென்றுவந்த பின்னர்தான் கையில் இருந்த குடையை எங்கேயோ வைத்துவிட்டு வந்துவிட்டோம் என்பது நினைவுக்கு வந்தது.ஆனால், எங்கே குடையை வைத்து விட்டோம்...

843 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாட்டில் தளர்வு!

இலங்கை மத்திய வங்கி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை தளர்த்தியதுடன் சுமார் 843 வகையான பொருட்களுக்கு அந்த பொருட்களை இறக்குமதி செய்யும் போது பொருட்களின் மொத்த மதிப்புக்கு சமமான 'பண வரம்பு...

பொதுமக்களுக்கு வெப்பநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் இன்று வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதற்கமைய, வடக்கு, வட மத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு...