31 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பத்தரமுல்லை – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்திற்கு முன்பாக பதற்றம்

நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்திற்கு முன்பான இன்று சிவில் அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்த்தினால் அந்த பகுதியில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது.
ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கான பிரஜைகள் ஒன்றியத்தினர் உள்ளடங்கலாக சிவில் அமைப்புக்களை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்தே இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக சிதறுதேங்காய் உடைத்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதன்போது ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கான பிரஜைகள் ஒன்றியத்தின் தலைவர் ஜாமுனி கமன் துஷார இவ்வாறு தெரிவித்தார்.
மக்கள் ஆணையற்ற ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க மக்களின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்கின்றார். 69 இலட்சம் மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த மொட்டுக்கட்சியினர் இந்த விடயத்திற்கு துணையாக நாடாளுமன்றத்தில் சட்டங்களை கொண்டு வரும் போது கரங்களை உயர்த்தி ஆதரவு வழங்குகின்றனர் .அதன் ஊடாக நாட்டின் சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு விற்கப்படுகின்றன. ஆகவே இந்த செயலுக்கு எதிர்பை வெளியிடும் முகமாக இன்று நாம் ரணில், பசில் , நாமல் ஆகியோருக்கு எதிராக சிதறுதேங்காய் உடைத்துள்ளோம்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையக வாளகத்திற்குள் நுழைய எத்தனித்த போது அந்த பகுதிக்கு வருகை தந்த பொலிசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.இதனிடையே அந்த வழியில் சென்ற அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ,
இவர்கள் நாட்டை மீண்டும் பாதிப்புக்குள்ளாக்குவதற்கு எண்ணும் தரப்பனராவர். பணத்துக்காகவே இந்த விடயத்தை அவர்கள் மேற்கொள்கின்றனர். அதனால் எமக்கு எந்த சிக்கலும் இல்லை. அத்துடன், நாட்டில் ஜனநாயகம் உள்ளது. அந்த வகையில் அவர்களுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் சுதந்திரம் உள்ளது என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்Nடிறன்.

இத்தகைய பின்னணியில் ஆர்ப்பாட்டக்கார்கள் பொலிசாரின் தடுப்பிற்கு மத்தியில் சிதறுதேங்காய் உடைத்து தமது எதிர்ப்பை வெளியிட்டமையை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதன்போது அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles