பனை அபிவிருத்திச் சபையின் பனை சார் உற்பத்திப் பொருட்களை பொதுமக்கள் வீட்டில் இருந்தவாறு இணையவழி மூலம் பெற்றுக்கொள்ளும் புதிய வேலைத்திட்டம் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிசாந்த பத்திராஜ தெரிவித்தார் .

யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அபி சபையின் தலைமை காரியாலயத்தில் வீடுகளில் இருந்தவாறு பனை உற்பத்திப் பொருட்களை இணைய வழி மூலம் கொள்வனவு செய்யும் புதிய வேலைத் திட்டத்தினை ஆரம்பித்து வைத்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இன்றைய தினம் பனை அபிவிருத்தி சபையானது புதிய யுகத்தில் காலடி எடுத்து வைக்கின்றது பனை அபிவிருத்தி சபையினால் சாதாரண விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் முகமாகவடபகுதி உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்
இன்றைய தினம் பனை அபிவிருத்தி சபையினரால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களினை தற்போது உள்ள கொரோனா தாக்கத்தின் காரணமாக பொதுமக்கள் எமது விற்பனை நிலையங்களில் வந்து தமது பொருட்களை கொள்வனவு செய்யாது தமது வீடுகளில் இருந்தவாறு இணையவழி மூலம் தமது பொருட்களை ஓடர் செய்து வீட்டிற்கு பொருட்களை வீட்டில் இருந்தவாறே பெற்றுக் கொள்ளும் புதிய திட்டம் ஒன்றினை இன்றைய தினம் ஆரம்பித்து வைத்துள்ளோம் இன்றிலிருந்து இந்த திட்டம்செயற்படுத்தப்படும் .
குறிப்பாக பனை அபிவிருத்தி சபையின் பனை சார்உற்பத்தி பொருட்களை வெளிநாடுகளில் உள்ளவர்களும் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் எமதுஅமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்றது அதன் முதற் கட்டமாக இலங்கையில் உள்ளவர்கள்வீடுகளில் இருந்தவாறு பொதுமக்கள் பனை உற்பத்திப் பொருட்கள் பெற்றுக்கொள்வதற்கான திட்டமே இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
எதிர்காலத்தில் இந்த திட்டமானது மேலும் விரிவாக்கப்பட்டு யாழ்ப்பாணம் மட்டுமல்லாது இலங்கையின் அனைத்து பாகங்களிலும் உள்ள மக்கள் பனை உற்பத்திப் பொருட்களை வீடுகளிலிருந்து மிகவும் மலிவான முறையில் பெற்றுக் கொள்ளும் திட்டமாக இது அமையும் என தெரிவித்தார்.
