பன்னிரெண்டு நாட்களைத் தொட்டது, மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்

0
111

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ள நிலையில், போராட்டத்தின் 12வது நாளான இன்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
காந்திபூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபிக்கு அருகே முன்னெடுக்கப்படும் இப்
போராட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பட்டதாரிகள் இணைந்து வருகின்றனர்.
தமது நியமனம் தொடர்பில் அரசாங்கம் கவனம் எடுக்க வேண்டும் என பட்டதாரிகள் கோரிக்கை விடுத்தனர்.