பொதுமக்கள் பஸ் பயணங்களின் போது தாம் பயணம் செய்யும் பஸ்ஸின் இலக்கத்தகடு(License plate) எண்ணைக் குறித்து வைத்துக் கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒரு பஸ் பயணி கொவிட்- 19 தொற்று சோதனைக்காளாகி இருப்பின் குறித்த பஸ்ஸில் யார் யார் பயணம் செய்தனர் என்பதை அறிய இந்த விபரங்கள் பயன்படும் என அவர் வலியுறுத்தினார்.
பஸ் உரிமையாளர்கள் பஸ்ஸின் இலக்கத்தகடு எண்ணை பஸ்ஸில் காட்சிப்படுத்துமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.